மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில்லாரி பட்டறை தொழிலாளி தீக்குளித்து தற்கொலைபோலீசார் விசாரணை + "||" + In Namakkal The lorry workshop worker commits suicide Police investigation

நாமக்கல்லில்லாரி பட்டறை தொழிலாளி தீக்குளித்து தற்கொலைபோலீசார் விசாரணை

நாமக்கல்லில்லாரி பட்டறை தொழிலாளி தீக்குளித்து தற்கொலைபோலீசார் விசாரணை
நாமக்கல்லில் லாரி பட்டறை தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல், 

நாமக்கல் கருப்பட்டிபாளையத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 52). இவர் சேலம் சாலையில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மோகன், சமீப காலமாக உறவினர்களிடம் பேசுவதை குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள கடை ஒன்றின் முன்பு உடலில் ஆயிலை பூசிக்கொண்டு தீ வைத்து கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலன்இன்றி மோகன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் மணி (52) என்பவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை
பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. காரிமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
காரிமங்கலம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.
3. கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
கீழ்பென்னாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. பூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
பூதப்பாண்டி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. புவனகிரி அருகே பெண், தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்
புவனகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற அவருடைய தாயும் படுகாயமடைந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை