மாவட்ட செய்திகள்

ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைப்பு + "||" + The breakthrough in the temple of Anjaneya

ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைப்பு

ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைப்பு
ஆஞ்சநேயர் சன்னதி முன்பு உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தெற்கு 4-ம் வீதி கடை வீதி சந்திப்பில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து நடைசாத்தப்பட்டது. நேற்று காலை கோவிலுக்கு வந்த பணியாளர்கள் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, ஆஞ்சநேயர் சன்னதி முன்பு உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மூலஸ்தான சன்னதி கதவையும் உடைக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கோவில் பணியாளர்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.12½ லட்சம் கிடைத்துள்ளது.
2. சிங்கம்பட்டியில் சாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு
சிங்கம்பட்டியில் சாமி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் மீண்டும் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
திருமருகல் அருகே சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
4. மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு; வீணாகிய தண்ணீர்
மேட்டூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
5. கந்தர்வகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது
கந்தர்வகோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.