சேலத்தில் லாரி மோதி தொழிலாளி பலி நண்பர் படுகாயம்
சேலத்தில் லாரி மோதி தொழிலாளி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
கொண்டலாம்பட்டி,
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 26), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் குமரவேலுவுடன் (20) பூலாவரியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் அவர்கள் நெய்க் காரப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை செல்லதுரை ஓட்டினார்.
நெய்க்காரப்பட்டி பிரிவு ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த லாரி அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே செல்லதுரை பரிதாபமாக இறந்தார். குமரவேல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story