ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி பந்தயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் மலை பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடந்தது. மணக்கரையில் இருந்து வல்லநாடு வரையிலும் சென்று திரும்பி வரும் வகையில், 8 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சிறிய மாட்டு வண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி முதலிடமும், நாலந்துலாவைச் சேர்ந்த உதய முத்துபாண்டி மாட்டு வண்டி 2-வது இடமும், வேலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் பாண்டியன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தன.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் கயத்தாறைச் சேர்ந்த நாச்சியார் மாட்டு வண்டி முதலிடமும், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி 2-வது இடமும், வடக்கு காரசேரியைச் சேர்ந்த ஓட்டக்காரன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது. குதிரை வண்டி பந்தயத்தில் மணக்கரையைச் சேர்ந்த வள்ளிநாயகம் குதிரை வண்டி முதலிடமும், அவினாப்பேரியைச் சேர்ந்த நிவேதா குட்டி குதிரை வண்டி 2-வது இடமும், கால்வாயைச் சேர்ந்த முத்து குதிரை வண்டி 3-வது இடமும் பிடித்து.
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.11 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டது. குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story