மாவட்ட செய்திகள்

தேவகோட்டை நகராட்சியில் மறுசுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் + "||" + Public Fight Against Recycling Garbage Collection at Devakottai Municipality

தேவகோட்டை நகராட்சியில் மறுசுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

தேவகோட்டை நகராட்சியில் மறுசுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
தேவகோட்டை நகராட்சியின் மறு சுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தேவகோட்டை,

தேவகோட்டை ஜீவா நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் தேவகோட்டையில் உள்ள 6 வார்டுகளைச் சேர்ந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை போட்டு அதனை இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தேவகோட்டை சப்–கலெக்டர் தலைமையில் அப்பகுதி மக்களுடன் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள் இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது என்றும், அவ்வாறு அமைத்தால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசு ஏற்படும் என்று கூறினர்.

இந்த நிலையில் அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மறு சுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டு இந்த பணிகளை தொடரக் கூடாது என்று தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை துணை தாசில்தார், நேரு நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, நகராட்சி பொறியாளர் ஜெயபால், நகரமைப்பு ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
சிவகிரி அருகே தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி தொங்க விட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. திம்பம் மலைப்பாதையில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கக்கூடாது; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
திம்பம் மலைப்பாதையில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கலெக்டர் சி.கதிரவனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
3. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
4. திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5. சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.