மாவட்ட செய்திகள்

உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் பரிதாபம் + "||" + Police suicide near Usilampatti Because the parents did not agree to marry the beloved

உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் பரிதாபம்

உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால் பரிதாபம்
காதலியை திருமணம் செய்ய தன்னுடைய பெற்றோர் சம்மதிக்காததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி காலனியை சேர்ந்தவர் வனராஜா. அவருடைய மகன் சதீஸ் (வயது 26). இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

சதீஸ் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இதற்கு அவருடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சதீஸ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது மீண்டும் தனது காதல் திருமணம் குறித்து பெற்றோரிடம் பேசியுள்ளார். ஆனால் அவருடைய திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த சதீஸ் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் சதீஸ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஒரு அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலையில் அவருடைய பெற்றோர் சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் பிணமாக தொங்கிய மகனை கண்டு அவர்கள் கதறினர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார், சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்காததுதான் தற்கொலைக்கு காரணமா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. லாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு
லாஸ்பேட்டையில் கடன் பிரச்சினையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை
காங்கேயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் படுகாயத்துடன் தப்பிய அவர்களது பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. ‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி, குன்னத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பாக கீழே அழைத்துவந்தார்.
4. கணவரின் கடன் தொல்லையால் தூக்கு போட்டு பெண் தற்கொலை
கணவரின் கடன் தொல்லையால் வேதனை அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் ரூ.14¼ லட்சம் கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...