பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் மனைவி- காதலி அடிபிடி பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
பொது இடத்தில்பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் அவரது மனைவியும்,காதலியும்அடிபிடியில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
பொது இடத்தில்பா.ஜனதா எம்.எல்.ஏ. முன்னிலையில் அவரது மனைவியும்,காதலியும்அடிபிடியில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
யவத்மால் மாவட்டம் ஆர்னி தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜூ டோட்சம். இவரது மனைவி தொடக்கப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜூ டோட்சம் தனது கட்சியை சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனது மனைவியான ஆசிரியையும் அவர் விவாகரத்து செய்யவில்லை.
இந்த நிலையில் ராஜூ டோட்சம் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பண்டர்காவ்டா பகுதியில் நேற்று முன்தினம் கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ., பின்னர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
அடிபிடி
இந்த நிகழ்ச்சியின் போது அவரது மனைவியும், காதலியும் வந்திருந்தனர். இரு பெண்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களது சண்டையை விலக்கி விடும் முயற்சியில் எம்.எல்.ஏ. ஈடுபட்டார். அப்போது சிலர் சூழ்ந்து கொண்டு எம்.எல்.ஏ.வையும் தாக்கினர்.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி எம்.எல்.ஏ.வை மீட்டனர். இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ.வின் காதலிக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பொதுஇடத்தில் பலர் வேடிக்கை பார்க்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story