செஞ்சியில் ஆலோசனை கூட்டம்: சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும் கடை உரிமையாளர்களுக்கு, அதிகாரி வேண்டுகோள்
செஞ்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செஞ்சி,
செஞ்சியில் உணவு பாதுகாப்பு துறை, செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்கம் சார்பில் சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கட் வரவேற்றார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பத்மநாபன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு சுற்றுலா துறையினர் தமிழகத்தில் உள்ள 130 இடங்களில் சுகாதாரமான பகுதிகளை தேர்வு செய்ய உள்ளனர். இதில் செஞ்சி கோட்டை சுற்றுலா பகுதியாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சாலைகளில் உள்ள டீ கடைகள், பேக்கரிகள், பங்க் கடைகள் உணவகங்களின் உரிமையாளர்கள் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். மேலும், கடை உரிமையாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
இதில் வர்த்தகர் சங்க துணைத்தலைவர்கள் ராஜகோபால், மணிகண்டன், இணை செயலாளர் சையத் ஷபிர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிரசாந்த் அருண்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story