காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணகி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணகி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2019 10:45 PM GMT (Updated: 14 Feb 2019 7:10 PM GMT)

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூம்புகாரில் உள்ள கண்ணகி சிலையிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவெண்காடு,

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காதலர் தினத்தால் ஏற்படும் கலாசார சீரழிவுகளை தடுக்க வலியுறுத்தியும் பூம்புகார் கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு நாகை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட இந்துமக்கள் கட்சி அமைப்பாளர் பாலாஜி, துணை தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன் கலந்து கொண்டு கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தார். அப்போது காதலர் தினத்தால் ஏற்படும் கலாசார சீரழிவுகள் குறித்து விளக்கும் வகையில் கண்ணகி சிலையிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிவானந்த செல்வம், மாவட்ட செயலாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், அருள், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story