3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா உத்தரவு


3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா உத்தரவு
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதை தொடர்ந்து, ஒரே ஊரில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி, கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டலபோலீஸ் ஐ.ஜி. பெரியய்யா பிறப்பித்து உள்ளார்.

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கே. ஸ்ரீராமசந்திரன், போத்தனூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜே.கே. கோபி, கிழக்குப்பிரிவு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏ.மசுதா பேகம், கோவை வெறைட்டி ஹால் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் எம்.தேவேந்திரன், கோவை சிறார் சீர்திருத்தப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஆர்.ஹேமா ஆகியோர் கோவை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோவை உக்கடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் சேலம் மாநகருக்கும், கோவை ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பி.என்.ராஜன் திருப்பூர் மாநகருக்கும், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கே.எஸ். சரவணன் திருப்பூர் மாநகருக்கும், காட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கே.பி.சாந்தி சேலம் மாநகருக்கும், கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வி.விஜயகுமாரி சேலம் மாநகருக்கும், கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் டி.வீரமணி திருப்பூர் மாநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கோவை சரகத்துக்கும், கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ். ராஜேஸ்வரி கோவை சரகத்துக்கும், கோவை பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.அன்பரசு கோவை சரகத்துக்கும், கோவை வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா திருப்பூர் மாநகருக்கும், கோவை ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி கோவை சரகத்துக்கும், திருப்பூர் மாநகரம் தெற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி கோவை மாநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் ஏ.சக்திவேல் கோவை மாநகருக்கும், நீலகிரி மாவட்டம் மசினகுடி இன்ஸ்பெக்டர் எல்.முரளிதரன் கோவை மாநகருக்கும், கோவை வடவள்ளி இன்ஸ்பெக்டர் ஏ.ரவி கோவை மாநகருக்கும், ஈரோடு மாவட்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா கோவை மாநகருக்கும், சேலம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள இன்ஸ்பெக்டர் செல்வம் கோவை மாநகருக்கும், தர்மபுரி மாவட்டம் எரியூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பி.ஜெய்சங்கர் கோவை மாநகருக்கும், தர்மபுரி மாவட்டம் மாரந்தஹள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் ஹுசைன் கோவை மாநகருக்கும் மாற்றப்பட்டனர்.

கோவை மாநகரம் கிழக்கு பகுதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஏ.சண்முகம் கோவை சரகத்துக்கும், கோவை மாநகரம் மேற்கு பகுதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கே.வி.சதாசிவம் கோவை சரகத்துக்கும், கோவை மாநகரம் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் எம்.ரவிசந்தர் கோவை சரகத்துக்கும், ஈரோடு மாவட்டம் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கே.கோவிந்தராஜ் கோவை மாநகருக்கும், சேலம் மாவட்டம் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கே.உதயகுமார் கோவை மாநகருக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை நகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த என்.வாசு, ஏ.பிரேமா, ஆர்.ராஜேஸ்வரி, கே.ஜமுனா, வி.ஜெகநாதன், டி.சுமித்ரா, யு.ராஜேஷ், எஸ்.ரேணுகாதேவி, எம்.ஆனந்த், ஜி.விஜயலட்சுமி, பி.கோமதி, சி.ஜெயச்சந்திரன், ஏ.சவுந்தர்ராஜன், ஆர்.ஆறுமுகம், ஏ.கனகராஜ், டி.ராஜேந்திரன், ஜி.நாகராஜன், பி.செல்வகுமார் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இ.அசோகன், உஷாகுமாரி ஆகியோர் ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் எஸ்.பாலசுப்பிரமணியம், கே.சண்முகசுந்தரம், ஆர்.சிவகுமார், சி.துரைசாமி, டி.நாகராஜன், ஜி.சண்முகவடிவேலு, பி.கார்த்திகேயன், என்.சுந்தர்ராஜ், பி.அர்ஜுனன், கே.எஸ்.அசோக்குமார், பி.அய்யாசாமி, டி.முருகன், கே.செல்வன், எம்.மயில்சாமி, ஜி.ஞானபிரகாசம், ஏ.பூமிபாலகன், வி.மனோகரன், கே.என்.கணேசன் ஆகியோர் கோவை மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வரும் எஸ்.ராமசாமி, உமாபதி, கே.வி.குருசாமி ஆகியோரும் கோவை மாநகருக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மேற்கு மண்டலம் முழுவதும் மொத்தம் இன்ஸ்பெக்டர்கள் 59 பேரும், சப்-இன்ஸ்பெக்டர்கள் 122 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story