ரேஷன் கடை மாற்றத்தால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க மறுப்பு
ரேஷன் கடை மாற்றத்தால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குவதை புறக்கணித்து வருகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி காசிம் புதுப்பேட்டை மற்றும் செரியலூர், இனாம் ஊராட்சி காதர்முகைதீன் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி காதர்முகைதீன் நகரில் சேந்தன்குடி நகரம் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ரேஷன் கடை திறக்கப்பட்டு பகுதி நேர ரேஷன் கடையாக செயல்பட்டு வந்தது. கடந்த நவம்பர் 15-ந் தேதி வரை காதர்முகைதீன் நகரில் வாடகை ஓட்டு கட்டிடத்திலேயே ரேஷன் கடை செயல்பட்டது. நவம்பர் 16-ந் தேதி கஜா புயலால் ரேஷன் கடை கட்டிடம் உடைந்து சேத மடைந்தது. இதனால் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
சேந்தன்குடி நகரம் கூட்டுறவு சங்கத்தில் இருந்து மாற்று இடம் கேட்கப்பட்ட நிலையில், காசிம்புதுப்பேட்டையில் தபால் நிலையம் அருகே புதிய கட்டிடத்தை அப்பகுதி மக்கள் கட்டி கொடுத்தனர். இந்த நிலையில் சேந்தன்குடி நகரம் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடம் காசிம்புதுப்பேட்டை கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்டபகுதி என்பதால் எங்கள் நிர்வாகத்தின் கடையை அங்கே திறக்க முடியாது என்று கூறியதுடன், பொதுமக்களின் நலன் கருதி காதர்முகைதீன் நகரில் ஒரு வாடகை வீட்டில் கடை திறந்துள்ளனர்.
இந்த நிலையில் சேந்தன்குடி நகரம் கூட்டுறவு சங்கத்தினர் கேட்டுக் கொண்டதால் தான் காசிம்புதுப்பேட்டையில் கிராமத்தினரின் சொந்த செலவில் ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்டி உள்ளோம். ஆனால் கடை கட்டிய பிறகு மாற்று இடத்தில் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் காசிம்புதுப்பேட்டையில் கடை திறக்கும் வரை உணவுப் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று புறக்கணிப்பு செய்த சுமார் 200 குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு தொகை மற்றும் பொங்கல் பொருட்களையும் வாங்கவில்லை. கடந்த 3 மாதங்களாக காசிம்புதுப்பேட்டை மக்கள் ரேஷன் பொருள் வாங்காமல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர். ஆனால் காதர்முகைதீன் நகர் பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

Related Tags :
Next Story