காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்- ஆட்டுக்கு திருமணம் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டது


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்- ஆட்டுக்கு திருமணம் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டது
x
தினத்தந்தி 15 Feb 2019 4:30 AM IST (Updated: 15 Feb 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கும், ஆட்டுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கடத்தூர், 

பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் நினைவுப்பரிசுகள் மற்றும் ரோஜாப்பூ வழங்கி தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியிலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஏராளமான காதல் ஜோடிகள் அங்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி காதலர் தினத்தை கொண்டாடினார்கள்.

ஆனால் கொடிவேரி அணை பகுதியில் காதலர் தினம் கொண்டாட இந்து முன்னணி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி நிர்வாகிகள் கொடிவேரி அணையின் நுழைவு பகுதிக்கு, ஒரு நாய் மற்றும் ஆட்டை கொண்டு வந்தனர். இதில் நாயை மணமகனாகவும், ஆட்டை மணமகளாகவும் மாலை அணிவித்து அலங்காரம் செய்தனர். பின்னர் அங்கு வைத்து நாய்க்கும், ஆட்டுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அப்போது இந்து முன்னணி நிர்வாகிகள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் கொடிவேரி அணைக்கு வந்த காதல் ஜோடியினர் வந்த வழியே திரும்பிச்சென்றனர்.

Next Story