தொப்பூர் அருகே போலி டாக்டர் கைது


தொப்பூர் அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2019 4:15 AM IST (Updated: 15 Feb 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியில் போலி டாக்டர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஆஷாபிடரிக் தலைமையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை யில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஏலகிரி கிராமத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது சேஷம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆங்கிலம் மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவ துறை அதிகாரிகள் முருகேசனை தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போலி டாக்டர் முருகேசனை கைது செய்தனர்.

ஏமாற வேண்டாம்

தர்மபுரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என நலப்பணிகள் இணை இயக்குனர் ஆஷாபிடரிக் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது டாக்டர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் சசி, முருகன், ராஜேஷ்முருகன், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story