மாவட்ட செய்திகள்

காரைக்காலில்தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் + "||" + Karaikal DMK-Congress coalition parties protest

காரைக்காலில்தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்காலில்தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் தி.மு.க.- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால்,

மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.கவர்னர் மாளிகை முன்பு நேற்று 2வது நாளாக அவரது போராட்டம் தொடர்ந்தது. இதனால் புதுவையில் பரபரப்பு நிலவு கிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று காரைக்காலில் காங்கிரஸ் - தி.மு.க. தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாதா கோவில் வீதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும், தி.மு.க. அமைப்பாளருமான நாஜிம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருநள்ளாறு கொம்யூன் முன்னாள் தலைவர் சிங்காரவேலு, முன்னாள் வாரியத் தலைவர் மோகனவேலு, சின்னதம்பி மற்றும் நிர்வாகிகள் அரசன், சந்திரமோகன், சோழசிங்கராயர், நாகராஜ், கருணாநிதி, உள்ளிட்ட பலரும், தி.மு.க. சார்பில் ஆனந்தராஜ், ரிபாஷ் உள்ளிட்ட பலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வின்சென்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, மாதாகோவில் வீதியில், அனைவரும் சாலை மறியல் செய்ய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தின் முடிவில், முன்னாள் அமைச்சர் நாஜிம், நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் வாழும் மக்களை வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ள வேண்டும் என்பது, மத்திய பா.ஜ.க. புதுச்சேரி கவர்னருக்கு கொடுத்த வேலை ஆகும். அதை மட்டுமே கவர்வர் செய்கிறார். மக்கள் நலத்திட்டங்களில் ஆர்வம் காட்டவில்லை. இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆளும் அரசுடன் ஆலோசனை நடத்தாமல், ஹெல்மெட் விசயத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து, சாலையில் செல்லும் மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய கவர்னர் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது.

சாலையில் சாதாரண போலீசார் செய்யும் வேலையை கவர்னர் செய்துவருகிறார். அதற்கு பதில், காரைக்கால் காவல் நிலையங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. அவற்றில் ஒரு போலீசாராக பதவி ஏற்று போலீசார் வேலையை செய்ய முன்வரவேண்டும். ஆளும் அரசு, கூட்டணி கட்சிகளோடு ஆலோசனை நடத்தி, கவர்னருக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேர் கைது கோபியில் பரபரப்பு
கோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. துரைப்பாக்கத்தில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
துரைப்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.