ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி


ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 16 Feb 2019 3:15 AM IST (Updated: 16 Feb 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

வண்டலூர், 

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் ரோகினி நட்சத்திரா பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் பிரவீன் (வயது 19). பொத்தேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தோழி வேதலட்சுமி (20).

இவர் சென்னை போரூர் அருகே உள்ள ராமாபுரத்திலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பிரவீன், வேதலட்சுமி இருவரும் காயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிரவீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story