நாடாளுமன்ற தேர்தல் பணி: வீடியோகிராபர்கள் விண்ணப்பிக்கலாம் 22-ந் தேதி கடைசி நாள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் ஈடுபட விரும்பும் வீடியோகிராபர்கள் விண்ணப்பிக்க வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும்.
தூத்துக்குடி,
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் ஈடுபட விரும்பும் வீடியோகிராபர்கள் விண்ணப்பிக்க வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
தேர்தல் பணியில்..
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 2019-ல் நடக்க உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளில் வீடியோ கிராபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே வீடியோகிராபர்கள் வீடியோ காமிராவுடனான வாடகை விவரங்களை இறுதி செய்யும் பொருட்டு விலைப்புள்ளி விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கான படிவங்களை www.tenders.tn.gov.in மற்றும் www.thoothukudi.nic.in என்ற இணையதளங்களில் வரும் 22-ந்தேதி மாலை 3 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் படிவங்களை வரும் 22-ந்தேதி மாலை 3 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் (பொது) அறையில் உள்ள, மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் போட வேண்டும். அதன் பிறகு வரும் டெண்டர்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
முன்னோடி கூட்டம்
22-ந்தேதி மாலை 3.30 மணிக்கு அந்த பெட்டி திறக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தொடர்பான வீடியோ கிராபர்கள் முடிவு செய்யப்படுவார்கள். இது தொடர்பான முன்னோடி கூட்டம், வருகிற 18-ந்தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story