பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5,476 கோடி பாக்கி எதிர்க்கட்சி தலைவர் பேட்டி
பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5,476 கோடி பாக்கி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5,476 கோடி பாக்கி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
நிதி ஒதுக்கீடு செய்யாது
பெங்களூரு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக கூட்டணி அரசு, பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறியுள்ளது. ஆனால் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாது. ஆனால் மாநகராட்சி அந்த நிதியில் செய்ய வேண்டிய பணி ஆணைகளை வழங்குகிறது.
ரூ.5,476 கோடி பாக்கி
மாநில அரசு தனது பட்ஜெட்டில் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அறிவித்துள்ளது. அதற்கு செயல் திட்டம் ஒன்றையும் வகுத்துள்ளது. ஆனால் மாநில அரசு அறிவிக்கும் அளவுக்கு நிதி வழங்குவது இல்லை.
ஏற்கனவே மாநில அரசு அறிவித்த நிதியில் இன்னும் ரூ.5,476 கோடி பாக்கியுள்ளது. இப்போது மாநில அரசு புதிதாக ரூ.8,015 கோடி நிதியை 3 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5,476 கோடி பாக்கி பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது.
சமூக அநீதி
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதிகளுக்கு அதிக நிதியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதியை குறைத்தும் ஒதுக்கீடு செய்துள்ளனர். இது சமூக அநீதி ஆகும். மாநகராட்சிக்கு வழங்கியுள்ள பணி ஆணைகளை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு பத்மநாபரெட்டி கூறினார்.
Related Tags :
Next Story