ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவும், ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் விஜயமுருகன், மாவட்ட தலைவர் முத்துராமு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் சேதுராமு, முருகேசன், கல்யாணசுந்தரம், நவநீத கிருஷ்ணன், ராஜூ, ராமநாதன், பொன்னுச்சாமி, பெரியசாமி, ஜெயபால் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story