வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2019 3:15 AM IST (Updated: 16 Feb 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர், 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் செல்லதுரை உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வறட்சி மாவட்டமாக பெரம்பலூரை அறிவிக்க வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும். விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்கிட வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை பெற்று கொடுக்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்றிட வேண்டும். நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Next Story