தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மச்சாவு


தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மச்சாவு
x
தினத்தந்தி 16 Feb 2019 4:29 AM IST (Updated: 16 Feb 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

செக்கானூரணி அருகே தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

செக்கானூரணி,

செக்கானூரணி அருகே ஆ.கொக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது48).விவசாயி. நேற்று காலை 6 மணிஅளவில் தோட்டத்திற்கு சென்று தக்காளி செடிக்கு உரம் வைத்துவிட்டு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வருவதாக மனைவி அங்கையற்கன்னியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கணவர் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வராததால் தோட்டத்தில் சென்று பார்த்தபோது அங்கு பவுன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடலில் சிறு தீக்காயங்கள் இருந்ததால் உடனடியாக தனது உறவினர்களுக்கும், செக்கானூரணி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆ.கொக்குளம் கிராம நிர்வாக அலுவலர் சேகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி, செக்கானூரணி சப்–இன்ஸ்பெக்டர் அய்யர் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் வல்லுனர் பாஸ்கர் தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கபட்டு சிறுதூரம் சென்று திரும்பிவிட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story