நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’


நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’
x
தினத்தந்தி 16 Feb 2019 3:48 PM IST (Updated: 16 Feb 2019 3:48 PM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்காவில் காணப்படும் சுமார் நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய, அணு உலை போன்ற அமைப்பு விஞ்ஞானி களுக்கு இன்றும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

அணு உலை என்பது நவீன அறிவியல் தொழில்நுட்பத்தால் சாத்தியமான ஒன்று. ஆனால் ஆப்பிரிக்காவின் காபோன் ஓக்லோவில் அணு உலை போன்ற அமைப்பு காணப் படுவது, உறுதியான விடை தெரியாத கேள்விகளை எழுப்புகிறது.

இதை மனிதர்கள் நிறுவினார்களா, வேற்றுக்கிரகவாசிகள் நிறுவினார்களா என்ற கேள்விக்கு பலரும் விடை காண முயல்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத அக் காலத்தில் எப்படி இது சாத்தியமாகி இருக்க முடியும் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

வேற்றுக்கிரகவாசிகள் அல்லது அவர்கள் உதவியுடன் மனிதர்கள் இதை அமைத்திருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறுகிறது.

இதற்கிடையில் விஞ்ஞானிகள் சிலர், ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு விளக்கத்தை அளித் திருக்கின்றனர்.

அதாவது, அரிதாக இயற்கையாகவே அணு உலை போன்ற அமைப்பு உருவாகி இருக்கலாம் என்பது அவர்கள் கருத்து.

இங்கு காணப்பட்ட யுரேனிய தாதுக்களும், அவற்றில் நிகழ்ந்த அணுப் பிளவுகளும் இயற்கையானவை என்று ஆய்வாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இது தவிர, குறிப்பிட்ட அமைப்புக்கு வேறு எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது என்கின்றனர் அவர்கள்.

Next Story