திருடுபோன 400 வருட போன்சாய் மரம்
400 வருட பழமையான போன்சாய் மரம் திருடுபோனது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதி பொக்கிஷமாக வைத்திருந்த ஏழு போன்சாய் மரங்கள் திருடிச் செல்லப்பட்டுவிட்டன. அம்மரங்களை திருடிச் சென்ற திருடன் அவற்றை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அத்தம்பதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருடப்பட்ட மரங்களில் ஒன்று, 400 வருட பழமையான ஷிம்பாக்கு மரம். அந்த ஒரு மரத்தின் மதிப்பு மட்டும் ரூ. 63 லட்சம்!
தங்களின் போன்சாய் மரங்கள் காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என்றும் எனவே அதற்கு முறையாக நீர் ஊற்ற வேண்டும் என்றும் திருடனை அந்த தம்பதியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போன்சாய் மரங்கள் என்பது ஒரு பெரிய மரத்தை போன்று தொட்டிகளில் சிறியதாக வளர்க்கக்கூடிய மரங்கள். அவற்றை வளர்ப்பதற்கு உரிய நிபுணத்துவமும் மிகுந்த பொறுமையும் வேண்டும்.
Related Tags :
Next Story