மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பேச்சு


மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2019 5:00 AM IST (Updated: 17 Feb 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.

காங்கேயம்,

காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி ஊராட்சி சிக்காம்பாளையம் கிராமத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.சரவணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ்சந்த், செயலாளர் ஜெபிமேத்தர், கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி, ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பேசியதாவது:–

மத்தியில், ராகுல்காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மாணவர்களுக்கு கல்விக்கடன் உறுதி செய்யப்படும் என்றார்.

கூட்டத்தில் சிக்காம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story