எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 17 Feb 2019 4:45 AM IST (Updated: 17 Feb 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுகள் தொடங்குவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுகள் தொடங்குவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.

குமாரசாமி ஆலோசனை

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கி நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் நடைபெறுவது குறித்து பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது மாணவ, மாணவிகளுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படாத வண்ணம் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார். அதே நேரத்தில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்கவும், அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் கல்வித்துறை மூத்த அதிகாரி பி.சி.ஜாபர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அறைகளில் கண்காணிப்பு கேமரா

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அடுத்த மாதம்(மார்ச்) 1-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8.45 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். அதுபோல, மார்ச் மாதம் 21-ந் தேதி பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 6.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் விளக்கமாக எடுத்து கூறியுள்ளோம்.

தேர்வு நடைபெறும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். கடந்த காலங்களில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வினாத்தாள் முன்கூட்டியே வெளிவருவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு்ள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story