பயங்கரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி பாகிஸ்தான் கொடியை எரித்து ஆவேசம்


பயங்கரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி பாகிஸ்தான் கொடியை எரித்து ஆவேசம்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:00 AM IST (Updated: 17 Feb 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தான் கொடியை எரித்தனர்.

கோபால்பட்டி,

ஜம்மு காஷ்மீரில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதை கண்டித்தும், இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கோபால்பட்டியில் மாங்காய் கமிஷன்மண்டி வணிகர்கள் சங்கம் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.

கோபால்பட்டி பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் வேம்பார்பட்டியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சங்கத்தின் தலைவர் அரிகரன் மற்றும் நிர்வாகிகள் ராஜ்கபுர், தண்டாபாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அய்யலூரில் இந்து முன்னணியினர் சார்பாக இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையில் ஏராளமானோர் அய்யலூரில் ஊர்வலமாக சென்றனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பினர்.

பின்னர் இறந்த வீரர்களின் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த பாகிஸ்தான் நாட்டு கொடியை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீசார் கொடியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கொடைக் கானல் நகரின் பல்வேறு இடங் களிலும் வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். மெழுகுவர்த்திகள் ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Next Story