சேலம் கோட்டைபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.30½ லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


சேலம் கோட்டைபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.30½ லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 Feb 2019 3:53 AM IST (Updated: 17 Feb 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.54¼ லட்சம் மதிப்பில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளன.

சேலம்,

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் ரூ.30½ லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், 30-வது வார்டு தாண்டவராயன் தெருவில் ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் சிறிய குடிநீர் தொட்டி, 27-வது வார்டு முல்லாக்காட்டில் ரூ.4¼ லட்சத்தில் சுகாதார வளாகம் உள்பட ரூ.54¼ லட்சம் மதிப்பிலான பல்வேறு நிறைவடைந்த பணிகள் திறப்பு விழா நடந்தது. சேலம் கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் நடந்த விழாவில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் அமான் என்கிற நாசர்கான், பகுதி செயலாளர் பிரகாஷ், 31-வது வார்டு செயலாளர் இப்ராகீம், நிர்வாகி பச்சையப்பன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story