மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் 4-வது நாளாக தர்ணா நீடிப்பு; ‘அரசுக்கு எதிராக கிரண்பெடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள்’ - முதல்-அமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு + "||" + The duration of the dharna is 4th day in Puducherry Against the government Kiranpedy and Rangaswamy plot Chief Minister Narayanasamy's allegation

புதுச்சேரியில் 4-வது நாளாக தர்ணா நீடிப்பு; ‘அரசுக்கு எதிராக கிரண்பெடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள்’ - முதல்-அமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு

புதுச்சேரியில் 4-வது நாளாக தர்ணா நீடிப்பு; ‘அரசுக்கு எதிராக கிரண்பெடி, ரங்கசாமி சதி செய்கிறார்கள்’ - முதல்-அமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு
புதுவை கவர்னர் மாளிகை முன்பு நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது ‘அரசை செயல்படவிடாமல் ரங்கசாமியும் கிரண்பெடியும் சேர்ந்து சதி செய்கின்றனர்’ என்று நாராயணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் புதுவை கவர்னர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் என விடிய, விடிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து வருகிறது.


கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ரோட்டிலேயே உணவுசாப்பிட்டு இரவு சாலையிலேயே தூங்குகிறார்கள்.

போராட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கிரண்பெடி பதவியேற்ற நாள்முதலே மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் கவர்னர் கிரண்பெடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராட்டம் பற்றி கவலைப்படாமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

மோடியின் தம்பியான எந்த பிரச்சினைகளிலும் வாய் திறக்காத ரங்கசாமியும், கிரண்பெடியும் சேர்ந்து கொண்டு இந்த அரசை செயல்படவிடாமல் சதி செய்து வருகின்றனர். இவர்கள் யார்? என்பதை இப்போது மக்கள் தெரிந்துகொண்டுவிட்டனர்.

எங்களது நியாயமான போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். டெல்லியில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கவர்னர் கிரண்பெடி இங்கு வந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கிறார். இனிமேல் ஒரு நிமிடம் கூட அவர் கவர்னராக நீடிக்கக்கூடாது.

இதுதொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
2. இலங்கை சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம், மீனவர்கள் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள 2 மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சம்பந்தப்பட்ட மீனவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
3. சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நடந்தது
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி சத்தியமங்கலம் அருகே இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மோடியின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க தயாரா? என அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி விடுத்தார்.
5. ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.