குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டிருந்த 6 மின்மோட்டார்கள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
சேலத்தில் குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டிருந்த 6 மின்மோட்டார்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் அருகில் பிளாஸ்டிக் தொட்டி வைத்து அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆழ்குழாய் கிணறு அருகே மாநகராட்சி சார்பில் மின்மோட்டார்கள் பொருத்தப்படும்.
இந்த நிலையில் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 47, 49, 53, 54 ஆகிய வார்டு பகுதிகளில் குடிநீர் தொட்டி அருகே பொருத்தப்பட்டு இருந்த 6 மின்மோட்டார்கள் திருட்டு போனது. யாரோ மர்ம ஆசாமிகள் அதை திருடி சென்று விட்டனர். இதனால் அந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கொண்டலாம்பட்டி மண்டல துணை ஆணையாளர் சுந்தர்ராஜனிடம் கூறினர். இதையொட்டி அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சிக்கு சொந்தமான 6 மின் மோட்டார்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 4 மண்டலங்களில் அவ்வப்போது குடிநீர் தொட்டியில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார்கள் திருட்டு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story