ராசிபுரம் அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்


ராசிபுரம் அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Feb 2019 3:30 AM IST (Updated: 18 Feb 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே, திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து 18 பேர் காயம் அடைந்தனர்.

ராசிபுரம், 

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

ராசிபுரம் தாலுகா நாம கிரிப்பேட்டை அருகேயுள்ள பெரப்பன்சோலை கிராம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்று (திங்கட்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. இதையொட்டி மணமகனின் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் நேற்று காலையில் நிச்சயதார்த்தம் செய்வதற்காக புறப்பட்டனர்.

மூலக்குறிச்சி சோதனைச்சாவடி அருகே வேன் சென்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 18 பேர் காயம் அடைந்தனர்.

18 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்தவர்கள் விவரம் வருமாறு:-

பெரியகோம்பையைச் சேர்ந்த பூங்கொடி (வயது 32), சந்திரசேகரன் (38), வெள்ளையம்மாள் (56), லட்சுமி (35). இவர்கள் 4 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பெரியகோம்பையைச் சேர்ந்த செல்லம்மாள் (40), குப்பாயி (55), செட்டியூரைச் சேர்ந்த சிந்து (30), சுவித்ரா (15), வெள்ளையம்மாள் (60), செல்லம்மாள் (30), கும்பக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜோதி (37), பழனியம்மாள் (60), சாந்தி (32), பழனியம்மாள் (55), பாப்பாத்தி (60), மூலக்குறிச்சியைச் சேர்ந்த பொன்னம்மாள் (40), ரத்தினம் (39), டிராவிட் (12). இவர்கள் 14 பேரும் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் டிராவிட் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story