நாடாளுமன்ற தேர்தல்: வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு


நாடாளுமன்ற தேர்தல்: வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்கு வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மையம் அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்கு வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கை மையம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நேற்று இந்த மையத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவை வைப்பதற்கான காப்பு அறைகள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வரும் பகுதி, அலுவலர்கள் வந்து செல்லும் பகுதி, காப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்து வரும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும், அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராயர், தேர்தல் துணை தாசில்தார் முரளி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story