பாலையக்கோட்டை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்


பாலையக்கோட்டை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாலையக்கோட்டை அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் வழங்கினர்.

திருமக்கோட்டை,

கோட்டூர் ஒன்றியம் பாலையக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாதேவி முன்னிலை வகித்தார். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோன்ஸ்ஐன்ஸ்டீன் வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சுப்பிரமணியன், நல்லாசிரியர் ராஜமாணிக்கம், ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் அமிர்தராஜ் ஆகியோர் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்-ஆசிரியர் கழக பொருளாளர் ராஜன், நிர்வாகிகள் செய்து இருந்தனர். முடிவில் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

முன்னதாக பாலமகா காளியம்மன் கோவிலில் இருந்து கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான எல்.சி.டி, ஒலிபெருக்கி சாதனங்கள், பீரோ, டேபிள்கள், நாற்காலிகள், குத்துவிளக்கு, சுவர் கடிகாரம், பாய்கள், தண்ணீர் டிரம், மின்விசிறி, எழுதுபொருட்கள், தேர்வு அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை மங்கள இசையுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

Next Story