மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய 3 சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்


மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய 3 சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 18 Feb 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கிய 3 சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அனுப்பி வைத்தார்.

சேத்துப்பட்டு, 

பெரணமல்லூர் அருகே அன்மருதை கிராமத்தை சேர்ந்தவர்கள் பூங்காவனம் (வயது 11), சூரியா (11), கண்ணப்பன் (11) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அன்மருதையில் இருந்த ஆவணியாபுரம் செல்லும் போது எதிரே வந்த வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிறுவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்சு வர காலதாமதம் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக காரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களை கண்டதும் அவர் உடனடியாக காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கி வந்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் உடனடியாக படுகாயம் அடைந்த 3 சிறுவர்களையும் மீட்டு பாதுகாப்பு போலீசார் காரில் ஏற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சிறுவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களுக்கு உதவி செய்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.

Next Story