பாவூர்சத்திரம் அருகே இருதரப்பினர் மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு போலீசார் குவிப்பு


பாவூர்சத்திரம் அருகே இருதரப்பினர் மோதல்; 5 பேருக்கு அரிவாள் வெட்டு போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2019 3:00 AM IST (Updated: 18 Feb 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தகராறு

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலபட்டமுடையார்புரம் கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரின் வடக்கு பகுதியில் மிகவும் பழமைவாய்ந்த தீப்பாச்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலம் அடைந்து இருந்தது. இதனை ஒரு சமுதாயத்தினர் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர். விழாவை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

இக்கோவிலுக்கு மற்றொரு சமுதாயத்தினர் வசிக்கும் தெரு வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டும். நேற்று மாலை அந்த தெரு வழியாக கோவில் திருவிழாவுக்கு சென்றபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

5 பேருக்கு அரிவாள் வெட்டு

இதில் ஒருதரப்பை சேர்ந்த அன்பரசு (வயது 27), மாரி (22), சங்கரபாண்டியன் (28), சாமிதுரை (36), முகேஷ் (20) ஆகிய 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் 5 பேரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மாரி, சங்கரபாண்டியன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story