நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: ரஜினிகாந்த் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளார் ஜி.கே.வாசன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: ரஜினிகாந்த் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளார் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 8:37 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் மூலம் அவர், தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளார்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் நேரு சிலைக்கு மாலை அணிவித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய ராணுவ வீரர்களை கோழைத்தனமாக தாக்கிய பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் குடும்ப மறுவாழ்விற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் மூலம் அவர், தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளார். த.மா.கா. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். திருச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என்றார். 

Next Story