மாவட்ட செய்திகள்

சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Minority organizations demonstrated

சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலைக்கோட்டை,

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய சிறுபான்மை கழக நிறுவன தலைவர் சதக்கத்துல்லா மவுலானா தலைமை தாங்கினார். முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன தலைவர் ஜைனுதீன், மக்கள் தேசம் கட்சி தலைவர் பாக்கியராஜ், லட்சிய திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கருப்பையா உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. வரி நிலுவைத் தொகை, வாட் வரி நிலுவை தொகை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய தொகை ஆகியவற்றை இதுநாள் வரை வழங்காமல் உள்ள மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: வேதாரண்யத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து வேதாரண்யத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மங்களமேடு அருகே உள்ள சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.