அ.தி.மு.க. விவசாய பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண வரவேற்பில் கட்சியினர், பிரமுகர்கள் வாழ்த்து


அ.தி.மு.க. விவசாய பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண வரவேற்பில் கட்சியினர், பிரமுகர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 18 Feb 2019 3:30 AM IST (Updated: 18 Feb 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. விவசாய பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கலசபாக்கம், 

கலசபாக்கம் தொகுதி எலத்தூர் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. விவசாய பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண வரவேற்பு விழா கலசபாக்கம் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்கள் கே.அருள்நேசன், ஜி.துர்காதேவி ஆகியோரை வாழ்த்தினர்.

விழாவில் வருகை தந்த அனைவருக்கும் 35-க்கும் மேற்பட்ட வகையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக மாலை 4 மணி முதல் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

மணமக்களுக்கு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில், படவேடு ரேணுகாம்பாள், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர், எலத்தூர்மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணியர் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து சாமி படங்களுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், கீழ்பென்னாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அரங்கநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.கோவிந்தராஜ், திருவண்ணாமலை நகர செயலாளர் ஜெ.செல்வம், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.கோவிந்தராஜ், துரிஞ்சாபுரம் ஒன்றிய பேரவை செயலாளர் எம்.ஜி.அரங்கநாதன், வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் மு.அருள்பழனி, திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமாரசாமி, துரிஞ்சாபுரம் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.அல்லாபகஷ், திருவண்ணாமலை ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் தென்மாத்தூர் எம்.கலியபெருமாள், தண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டி.ஜானகிராமன், துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் ஏ.கே.ஆர்.ஜெயபிரகாஷ், ஆருத்திராப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஏ.ஏ.ராமச்சந்திரன், புதுப்பாளையம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் கே.டி.ராஜமூர்த்தி, ஒன்றிய மாணவர் அணி இணை செயலாளர் எம்.டி.ஞானவேல், சி.கெங்கம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.உதயசேகரன், அருணாசலேஸ்வரர் சித்த வைத்தியசாலை சித்த மருத்துவர் எம்.பழனி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மேல்கரிப்பூர் நா.சேதுராமன், திருவண்ணாமலை முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் என்.பர்குணகுமார், திருப்பதி பாலாஜி என்கின்ற வி.வெங்கடேசன், மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ஜி.எம்.முத்து, மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுனர் அணி இணை செயலாளர் பி.பரசுராமன், கலசபாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.சி.கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.விமல்ராஜ், திருவண்ணாமலை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.தர்மராஜ், மாவட்ட தொழில் சங்க தலைவர் ஆர்.அன்பரசு, நல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை, ஒன்றிய மாணவர் அணி இணை செயலாளர் வி.முனுசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நூக்காம்பாடி சம்பத், ஒன்றிய பாசறை செயலாளர் அய்யனார், டி.கல்லேரி கூட்டுறவு சங்க தலைவர் கே.செல்வகுமார், வேங்கிக்கால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கே.சரவணன், ஒன்றிய மாணவர் அணி தலைவர் டி.அய்யப்பன், கல்லேரி இணை பேரவை செயலாளர் தெய்வீகன், நல்லூர் முன்னாள் மாணவர் அணி தலைவர் பி.கார்த்திகேயன், அடிஅண்ணாமலை பாசறை செயலாளர் கே.கார்த்தி, ஒன்றிய பாசறை எஸ்.தரணிதரன், மாணவர் அணி கே.ராஜ்குமார், நகர மாணவர் அணி தீபம் ராஜேஷ், ஜி.எஸ். கன்ஸ்ட்ரக்‌ஷன் கே.சிவா, கலசபாக்கம் மாணவர் அணி கே.சபரிநாத், கே.சத்தியநாத், ஆவண எழுத்தர் எஸ்.முருகன், மளிகை எம்.மதன், மங்கலம் எம்.ஜி.ஏ. கன்ஸ்ட்ரக்‌ஷன் ஏ.சதீஷ்குமார், ஏ.தேவி, அரசு ஒப்பந்ததாரர் ஏ.சுகுணசுந்தரி மற்றும் கொண்டம் கரியந்தல் இந்தியன் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story