விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் வலியுறுத்தல்


விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 10:05 PM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும் என அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல், 

சேலம் மண்டல அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஓய்வூதியம் உயர்வு மற்றும் சலுகைகள் வழங்க வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு சேலம் மண்டல ஆலோசகர் பழனிசாமி தலைமை தாங்கிபேசினார். நாமக்கல் மாவட்ட தலைவர் பழனிமுத்து வரவேற்று பேசினார்.

சங்க நிர்வாகிகள் மணிவண்ணன், பார்த்தசாரதி, கேசவன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில தலைவர் கனகராஜ், பொதுச்செயலாளர் கலியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த கூட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும். இடைக்கால நிவாரணமாக கோஸ்யாரி கமிட்டி பரிந்துரைப்படி ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும்.

நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட ரூ.1,000 ஓய்வூதியத்தை அனைவருக்கும் முழுமையாக வழங்கவேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இ.எஸ்.ஐ. அல்லது அதற்கு இணையான மருத்துவ வசதி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மோகனூர் சர்க்கரை ஆலை மன்மதன் நன்றி கூறினார்.

Next Story