ரூ.2,000 வழங்குவதாக அரசு அறிவிப்பு: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு
ரூ.2,000 வழங்குவதாக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள வர்கள் என்று சான்றிதழ் கேட்டு நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் அனைத் துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட் டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
வீட்டுமனை பட்டா, பசுமைவீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப் பட்ட துறை அதிகாரி களிடத்தில் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.
நேற்று வழக்கத்தைவிட மனு கொடுக்க வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இது சம்பந்தமாக மனு கொடுக்க வந்தவர்களின் கூட்டமே அதிகமாக இருந்தது.
வஞ்சூரை சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில் எங்கள் ஊரில் 1,300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அனைவருமே கூலி வேலைதான் செய்து வருகிறோம். அதேபோன்று நாங்கள் அனைவருமே வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் உள்ளோம். தற்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி எங்கள் கிராமத்தில் 300 பேர் மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். எனவே எங்கள் அனைவரையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று சான்றிதழ் வழங்கி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.
இதேபோன்று மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மனு கொடுத்த வர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற சான்றிதழ் கேட்டு மனு கொடுத்திருந்த னர்.
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கொடுத் துள்ள மனுவில், 20 திருநங்கை களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 12 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரையில் வீட்டுமனை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள் கிறோம் என்று கூறி உள்ள னர்.
மேலும் கொசப் பேட்டையை சேர்ந்த திருநங்கைகள் கொடுத்துள்ள மனுவில் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள வீட்டுமனையில் பசுமை வீடு கட்டித் தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story