கடலூரில், சினிமா தியேட்டரில் ரகளை- 6 வாலிபர்கள் கைது


கடலூரில், சினிமா தியேட்டரில் ரகளை- 6 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 5:59 PM GMT)

கடலூரில் சினிமா தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர், 

கடலூர் பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு நேற்று முன்தினம் இரவு காட்சி படம் பார்க்க 6 வாலிபர்கள் வந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் கையில் பீர் பாட்டில்கள் வைத்திருந்தனர். அவர்கள் அங்கிருந்த மேலாளர் வேதாசெல்வத் திடம் டிக்கெட் கேட்டனர். அவர் டிக்கெட் தீர்ந்து விட்டதாக கூறியதால், ஆத்திர மடைந்த 6 பேரும் வேதா செல்வத்திடம் தகராறு செய்தனர். பின்னர் அவரை ஆபாசமாக திட்டி, தாக்கி மிரட்டினர். தொடர்ந்து தியேட்டரில் இருந்த கண்ணாடி, பொம்மைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். பீர் பாட்டில் களையும் தரையில் வீசி உடைத்தனர். இதனால் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித் தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பா திரிப்புலியூர் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 6 பேரையும் பிடித்து பஸ் நிலைய புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அந்த வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத் தினர்.

பின்னர் திருப்பா திரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித் தனர். விசாரணையில் அவர் கள், குப்பன்குளம் செந்தில் மகன் சந்துரு (வயது 19), நாகராஜ் மகன் ராஜேஷ் (19), சரண் என்கிற அருண்குமார் (21), ஏழுமலை மகன் மாணிக்கம் (21), சுந்தர் மகன் ராஜி (19), ஏழுமலை மகன் ஆனந்தராஜ் (19) ஆகியோர் என்பதும், குடிபோதையில் தியேட்டரில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இது குறித்து வேதாசெல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

Next Story