மாவட்ட செய்திகள்

வடலூரில், டிராக்டர் மோதி, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி பலி + "||" + In Vadalur, tractor collision NLC Contract worker kills

வடலூரில், டிராக்டர் மோதி, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி பலி

வடலூரில், டிராக்டர் மோதி, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி பலி
வடலூரில் டிராக்டர் மோதி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடலூர், 

வடலூர் அருகே உள்ள கருங்குழி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருவாதிரை(வயது 40). என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வடலூர் அந்தோணியார் தெருவை சேர்ந்த ஜான்பீட்டர்(47) என்பவருடன் வடலூர்-சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் ஒன்று, இவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில் திருவாதிரை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த ஜான்பீட்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான திருவாதிரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. லாரி-கார் மோதல் - தொழிலாளி பலி
தூத்துக்குடி லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலினார்.
2. சிவகிரி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
சிவகிரி அருகே வாகனம் மோதி, தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. தனித்தனி விபத்தில்: தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. கச்சிராயப்பாளையம் அருகே, டிராக்டர் மோதி வாலிபர் பலி
கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.