நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது தினேஷ் குண்டுராவ் பேட்டி


நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது தினேஷ் குண்டுராவ் பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2019 3:03 AM IST (Updated: 19 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு,

மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வீரமரணம் அடைந்தனர்

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டது. பெயருக்கு மட்டுமே பா.ஜனதாவினர் தேசபக்தி பற்றி பேசுகிறார்கள். துணை ராணுவப்படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் நமது வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த விஷயத்தில் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். ஆனால் இந்த விஷயத்தில் பா.ஜனதா தலைவர்கள், மக்களை திசை திருப்பும் வகையிலும், வாக்குகளை ஈர்க்கும் வகையில் பேசுகிறார்கள். இது சரியல்ல.

திட்டமிட்டு அரசியல்

பயங்கரவாதிகள் தாக்குதலை தமது வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள மத்திய பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. ஆனால் பா.ஜனதா திட்டமிட்டு அரசியல் செய்து வருகிறது.

பயங்கரவாதிகள் தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதை வைத்து அரசியல் நோக்கத்தில் பேசி வாக்குகளை கவர பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசுகிறார். இதற்கு முன்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பயங்கரவாத தாக்குதலை முன்வைத்து அரசியல் செய்தனர்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஆட்சிக்கு வந்த பிறகு பயங்கரவாதிகளை ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு முறை துல்லிய தாக்குதலை நடத்தியதாக கூறி பெரிய அளவில் விளம்பரம் தேடிக்கொண்டனர். அதை விட்டால் வேறு எதையும் செய்யவில்லை. பாகிஸ்தானை ஒடுக்க பா.ஜனதா ஆட்சியில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

அதன் பிறகு காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Next Story