மாவட்ட செய்திகள்

திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள்–உதவி கமி‌ஷனர்கள் பணியிட மாற்றம் + "||" + Police Sub-Superintendent Assistant Commissioners in various districts including Trichy, Karur and Pudukottai

திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள்–உதவி கமி‌ஷனர்கள் பணியிட மாற்றம்

திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள்–உதவி கமி‌ஷனர்கள் பணியிட மாற்றம்
திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் உதவி கமி‌ஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் 89 பேரும், உதவி கமி‌ஷனர்கள் 33 பேரும் என மொத்தம் 122 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகரில் கோட்டை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி கமி‌ஷனராக இருந்த கோடிலிங்கம், நாகப்பட்டினம் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர், கோட்டை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், கோட்டை குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் பெரியண்ணன், தஞ்சை திருவையாறு போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன், தஞ்சை மாவட்டம் வல்லம் போலீஸ் துணை சூப்பிரண்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் கரூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்துக்கும், திருவள்ளூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை சூப்பிரண்டு துரைராஜ், கரூர் மாவட்ட மனித உரிமை பிரிவுக்கும், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கீதாஞ்சலி, மதுரை மாநகர உதவி கமி‌ஷனராகவும், கரூர் மாவட்ட துணை சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் மன்னார்குடிக்கும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை சூப்பிரண்டு அசோகன், கரூர் புறநகர் உட்கோட்டத்துக்கும், அரியலூர் மாவட்ட துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் துணை சூப்பிரண்டு கோபாலசந்திரன், திருச்சி கோட்டை குற்றப்பிரிவுக்கும், ஆலங்குடி துணை சூப்பிரண்டு சிகாமணி, இலுப்பூருக்கும், புதுக்கோட்டை பொன்னமராவதி துணை சூப்பிரண்டு தமிழ்மாறன் முசிறிக்கும், தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கும், அரியலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை சூப்பிரண்டு சங்கர், சென்னை அகாடமிக்கும், துணை சூப்பிரண்டு அய்யனார், அரியலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.
3. வடகாடு அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வடகாடு அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. போலீஸ், டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னையில் போலீஸ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் என 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.
5. முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு
முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.