வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
வீரமரணம் அடைந்த துணை ராணுவவீரர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மக்கள் நலச்சங்கம் சார்பில் நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மாரியப்பன், துணை தலைவர் கந்த சிவசுப்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் நல்லகண்ணு, நகர தலைவர் சித்திரை, வட்டார துணை தலைவர் புகாரி, அ.ம.மு.க. நகர செயலாளர் பால்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, செந்தூர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், செந்தூர் நலச்சங்க தலைவர் ஜோசப், செயலாளர் நம்பி, பொருளாளர் அய்யப்பன், கவுரவ ஆலோசகர் வக்கீல் கண்ணன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் காமராஜ், வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் கார்க்கி, எட்வர்ட், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ்செல்வன், துரைராஜ், தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, ச.ம.க., ஒன்றிய செயலாளர் சோடா ரவி, ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் சாந்தகுமார், மேலதிருச்செந்தூர் விவசாய சங்க செயலாளர் முத்துசெல்வன், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தூத்துக்குடி பிரையண்ட்நகர், சிவன்கோவில் தேரடி உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் தீரவாசகம் தலைமை தாங்கினார். வக்கீல் செந்தில் ஆறுமுகம், விஜயஆனந்த், வேல்முருகன், ராமசாமி, குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜோபிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பிரேம்வெற்றி, இணை செயலாளர் மாரியப்பன், பொருளாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மக்கள் நலச்சங்கம் சார்பில் நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மாரியப்பன், துணை தலைவர் கந்த சிவசுப்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் நல்லகண்ணு, நகர தலைவர் சித்திரை, வட்டார துணை தலைவர் புகாரி, அ.ம.மு.க. நகர செயலாளர் பால்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, செந்தூர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், செந்தூர் நலச்சங்க தலைவர் ஜோசப், செயலாளர் நம்பி, பொருளாளர் அய்யப்பன், கவுரவ ஆலோசகர் வக்கீல் கண்ணன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் காமராஜ், வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் கார்க்கி, எட்வர்ட், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தமிழ்செல்வன், துரைராஜ், தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, ச.ம.க., ஒன்றிய செயலாளர் சோடா ரவி, ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் சாந்தகுமார், மேலதிருச்செந்தூர் விவசாய சங்க செயலாளர் முத்துசெல்வன், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தூத்துக்குடி பிரையண்ட்நகர், சிவன்கோவில் தேரடி உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் தீரவாசகம் தலைமை தாங்கினார். வக்கீல் செந்தில் ஆறுமுகம், விஜயஆனந்த், வேல்முருகன், ராமசாமி, குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story