அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு
அங்கன்வாடி பணியாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.
விருதுநகர்,
மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர், குறு மைய பணியாளர் பணியிடங்களை நிரப்பிட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்த மையங்கள் சார்ந்த வட்டாரங்களுக்குரிய தினங்களில் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இதன்படி சாத்தூர், நரிக்குடி, திருச்சுழி, சிவகாசி ஆகிய வட்டாரங்களை சேர்ந்தவர்களுக்கு நாளையும் (புதன்கிழமை) ராஜபாளையம் (ஊரகம்), காரியாபட்டி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய வட்டாரத்தை சேர்ந்தோருக்கு 21-ந் தேதியும், ராஜபாளையம் (நகரம்), விருதுநகர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை ஆகிய வட்டாரத்தை சேர்ந்தோருக்கு 22-ந் தேதியும் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. இதனை கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு, விருதுநகர் சூலக்கரை மேட்டிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 4- ந் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நேர்முக அழைப்பாணைகளை, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் தேர்வு வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.

Related Tags :
Next Story