துணை ராணுவவீரர்கள் பலி: வணிகர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


துணை ராணுவவீரர்கள் பலி: வணிகர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 20 Feb 2019 4:15 AM IST (Updated: 20 Feb 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையிலும் பல்வேறு அமைப்பினர் இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் துணை ராணுவ வீரர்கள் பலியானவர்கள். பலியான துணை ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தி வருகிறார்கள்.

தஞ்சையிலும் பல்வேறு அமைப்பினர் இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் செயலாளர் பக்கிரிசாமி முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர். இதில் நகர செயலாளர் ஆனந்த், காமராஜர் மார்க்கெட் சங்க தலைவர் தர்மராஜ், பூதலூர் சங்க தலைவர் சண்முகராஜன், உள்ளாட்சி கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட வணிகர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

Next Story