ஜூகுவில் தமிழரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உடந்தையாக இருந்த டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில்
ஜூகுவில் தமிழரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
மும்பை ஜூகு நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி(வயது36). தமிழரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி ஜூகு பகுதியில் உள்ள ரகேஜா கல்லூரி அருகில் படுகாயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் 17 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மாரி அதே பகுதியை சேர்ந்த மதுரை என்பவரிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கி உள்ளார். மாரி அசல் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு வட்டியை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதுரை, மாாியை கொலை செய்ய முடிவு செய்தார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர் பாபு பெங்காலி மூலம் மது குடிக்க மாரியை அழைத்து வந்தார். பின்னர் அவர் தம்பி சில்வா, டிரைவர் பரமேஷ், பாபு பெங்காலி உதவியுடன் காரில் வைத்து மாரியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து உள்ளார்.
பின்னர் மதுரையின் டிரைவர் பரமேஷ், மாரியின் உடலை ராகேஜா கல்லூரி அருகே வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு கொடுக்கல், வாங்கல் தகராறில் மாரியை கொலை செய்த மதுரைக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் பரமேசுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கில் இருந்து மதுரையின் தம்பி சில்வா, பாபு பெங்காலி ஆகியோரை கோர்ட்டு விடுதலை செய்தது.

Related Tags :
Next Story