வானவில் : ஸ்விப்ட் பாயின்ட் ஜிடி மவுஸ்
இப்போது கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு மிகவும் அவசியமாகி விட்டது.
இதனால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் போது அவை கம்ப்யூட்டர் சார்ந்து இருப்பின், அனைவருக்கும் பயனுள்ளதாக அதே சமயம் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையிலான தயாரிப்புகளை வாங்குவது மிகச் சிறந்தது.
கம்ப்யூட்டருக்கான கீ போர்டிலிருந்து அதற்குரிய மவுஸ் வாங்குவது வரை அனைத்திலும் கவனம் செலுத்தினால் சிறந்த பொருள்களை வாங்க முடிவதோடு கம்ப்யூட்டரை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் பெருமளவு குறையும். அந்த வகையில் அதிகம் பயன்படுத்தும் மவுஸ் நாம் எதிர்பார்க்கும் வகையில் அல்லது பயன்படுத்த ஏதுவான வகையில் இருப்பதில்லை.
அந்தக்குறையைப் போக்கும் வகையில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது ஸ்விப்ட் பாயின்ட் ஜிடி மவுஸ். கைக்கு அடக்கமாக இருப்பதோடு இதைக் கையாள்வதும் எளிமையாக உள்ளது. அந்த அளவுக்கு இதன் செயல்பாடு மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேனாவை பிடித்து எழுதுவதைப் போன்று இந்த மவுஸை செயல்படுத்த முடிவது இதன் சிறப்பம்சமாகும். மிக சிறப்பான தொடு உணர்வு மூலம் இந்த மவுஸ் செயல்படுவதால் உங்களது சிரமம் பெருமளவு குறையும். 34 மி.மீ. உயரமும், 42 மி.மீ அகலமும்கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை வெறும் 22.7 கிராம் மட்டுமே. இதில் லித்தியம் அயன் பேட்டரி இருப்பதால் விண்டோஸ் தளத்தில் இது செயல்படும்.
வயர்லெஸ் அடிப்படையில் செயல்படும் இந்த மவுஸின் விலை ரூ.21,278 ஆகும். வழக்கமான டச்பேடை விட இதன் செயல்பாடு 40 சதவீதம் அதிகம். லேப்டாப்பிலேயே இதை சார்ஜ் செய்ய முடிவது கூடுதல் சிறப்பம்சமாகும்.
Related Tags :
Next Story