வானவில் : ஹெச்.பி.யின் பிரீமியம் லேப்டாப்


வானவில் :  ஹெச்.பி.யின் பிரீமியம் லேப்டாப்
x
தினத்தந்தி 20 Feb 2019 1:25 PM GMT (Updated: 20 Feb 2019 1:25 PM GMT)

ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் தனது பிரீமியம் மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஹெச்.பி. ஸ்பெக்ட்ரே எக்ஸ் 360 என்ற பெயரில் வந்துள்ள இந்த லேப்டாப்பில் இன்டெல் 8-வது தலைமுறை ஐ7 கோர் பிராசஸர் உள்ளது. இந்த லேப்டாப் மிக அழகிய தோல் உறையைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 13.3 அங்குல திரையைக் கொண்டது. இது தொடு திரையாகும். இதில் கொரில்லா கிளாஸ் 4 பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிகச் சிறிய மதர்போர்டு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹெச்.பி. நிறுவனம் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளது. இதில் 16 ஜி.பி. ரேம் 1 டி.பி. எஸ்.எஸ்.டி. நினைவக வசதி கொண்டது. இதில் 3 போர்ட்கள் உள்ளன. எஸ்.டி. கார்டு ரீடர் மற்றும் ஹெட்போன் மாட்டும் வசதியும் கொண்டது. வயர்லெஸ் இணைப்புக்கு புளூடூத் 4.2 இணைப்பு வசதி கொண்டது. இதில் ஹைபிரிட் முன்புற கேமரா உள்ளது. அழகிய பிரவுன் வண்ணத்தில் இது கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,29,990 ஆகும். 

Next Story