வானவில் : இனி வலிக்கும் ஊசி தேவையில்லை


வானவில் : இனி வலிக்கும் ஊசி தேவையில்லை
x
தினத்தந்தி 20 Feb 2019 1:43 PM GMT (Updated: 20 Feb 2019 1:43 PM GMT)

சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஊசி என்றால் மனதிற்குள் ஒரு பயமிருக்கும். எம்.ஐ.டி. விஞ்ஞானிகளும், ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவக் குழுவும் இணைந்து ப்ரைம் என்னும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது.

இந்த கருவியில் ஊசிகளுக்கு பதிலாக அதிக அழுத்தத்தில் ஆவியாக இருக்கும் திரவம் இருக்கிறது. இதில் இருக்கும் ஊக்கியானது துளை வழியே மருந்தை வெளித்தள்ளுகிறது.நமது தோளில் இக்கருவி வைக்கப்படும் போது மருந்து நம் உடலுக்குள் ஊடுருவுகிறது. நொடிக்கு இருநூறு மீட்டர் வேகத்தில் மருந்து உடலில் பாய்கிறது. இம்முறையில் சிறிதும் வலி ஏற்படுவதில்லை. ஒவ்வொருவரின் தோலின் தன்மைக்கு ஏற்றவாறு ப்ரைம் கருவியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் பயன்படும். முற்றிலும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதை கூடிய விரைவில் உலகமெங்கும் வெளியிட உள்ளனர்.

Next Story