மாவட்ட செய்திகள்

நூறு நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் மறியல் + "||" + The public stir the demand for a proper job in a hundred day program

நூறு நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் மறியல்

நூறு நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் மறியல்
குறைவான நாள் வேலை பார்த்த மக்கள் முறையாக வேலை வழங்கவேண்டும் என கூறி நேற்று காசங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் புதுப்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வார்டு வாரியாக நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதாக கூறப்படுகிறது. ஊராட்சி செயலாளர் ஒரு வார்டுக்கு அதிக நாள் வேலை தருவதாகவும், மற்றொரு வார்டு மக்களுக்கு குறைவான நாள் வேலை தருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறைவான நாள் வேலை பார்த்த மக்கள் முறையாக வேலை வழங்கவேண்டும் என கூறி நேற்று காசங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து, கிராமத்தின் பொதுவான இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் கூறி முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காசங்கோட்டை-ஸ்ரீபுரந்தான் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் விழா பேனர் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
திருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா பேனரை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தனியார் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் எம்.எல்.ஏ. உள்பட 102 பேர் கைது
கொல்லங்கோடு அருகே தனியார் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியல்
திருவரங்குளம் அருகே, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதல்; தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியல்
ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.